அகமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் நேற்று காலமானார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர் கேசுபாய் படேல். வயது 92. குஜராத்தில் 1995, 1998-2001 ஆண்டுகளில் முதல்வராக இருந்துள்ளார். ஏற்கனவே பல்வேறு உடல்நிலை கோளாறால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், அவருக்கு நேற்றுக் காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு குறைந்ததால் உடல்நிலை மிகவும் மோசமானது.