டெண்டர் எடுப்பதில் அதிமுகவில் கோஷ்டி மோதல்: கால்நடை மருந்தகம் கட்டிட பூமி பூஜை நிறுத்தம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சின்ன நாகபூண்டியில் கால்நடை மருந்தகம் உள்ளது. கடந்த 1968ம் ஆண்டு கட்டப்பட்ட  கால்நடை கட்டிடம்  பலவீனமடைந்து  இடிந்து விழும்  நிலையில் இருக்கிறது. இதனால்,  புதிய கட்டிடம் கட்ட ₹ 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் எடுக்க  அதிமுகவை சேர்ந்த இரு கோஷ்டியினர்  ஆர்வம் காட்டினர். இருப்பினும், பெரிய நாகபூண்டியை சேர்ந்த ஞானவேலு என்பவருக்கு டெண்டரை  வழங்கப்பட்டது. இதனையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜையில் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ பங்கேற்று பணிகள்  தொடங்கி வைக்க  கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இருப்பினும், அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் தலைமையில்  50க்கும் மேற்பட்ட பெண்கள்  கால்நடை மருந்தகம்  கட்டிடம்  அருகில் குவிந்து புதிய கட்டிடத்தை வெளியூர் சேர்ந்தவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.   இதனால், பூமி பூஜை தற்காலிகமாக நிறுத்தி  வைக்கப்பட்டதாக  கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.  

Related Stories: