சென்னை : திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்ட நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இணைய வழி கூட்டம் ஒன்றில் பேசும்போது, மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாக பேசிய வீடியோ சமூக ஊடங்கங்களில் பகிரப்பட்டது. இதனிடையே, இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, தொல்.திருமாவளவனை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் பா.ஜ. க. வினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர். திருமாவளவனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல்வேறு ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது.