சொல்லிட்டாங்க...

* தமிழகம் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகள் கூட வெள்ளத்தில் தவித்து வருகிறது. - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

* உச்ச நீதிமன்றத்தில் பாஜ அரசு சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் ஓபிசி மாணவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலையால்தான் 50% இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* இந்தியாவில் பெரும்பாலான கவர்னர்கள் பாஜவின் சேவகர்களாகவே உள்ளனர். இவர்களிடமிருந்து என்ன நீதியை எதிர்பார்க்க முடியும். - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

* மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்கு மத்தியஅரசு கொள்கை முடிவு எடுக்கும்வரை வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. - விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: