பொன்னேரி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுக்கு பூட்டு; நோயாளிகள் அதிர்ச்சி

பொன்னேரி: பொன்னேரியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையமான கோவிட்-19 மையம் செயல்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கானவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து எவ்வித உயிரிழப்புமின்றி மருத்துவம் பார்த்து வந்த இந்த மையத்தில் போதிய குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனை நிர்வாகம் இந்த மையத்தை திடீரென பூட்டுபோட்டுள்ளது.

இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க முடியாமல் தனியார் குடிநீர் கேன் நிறுவனத்திடமிருந்து கேன் தண்ணீரை வாங்கி நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தி வந்தனர்.  

மேலும், கழிவறைகள சுத்தம் செய்யாமல் உள்ளதால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதனை அகற்றுவதற்கு தொழிலாளர்கள் யாரும் வராததால் இந்த மையம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரத் துறையினர் முகாம்கள் நடத்தியும் கிராமம் கிராமமாக சென்றும் கொரோனா நோய் பரிசோதனை செய்து வந்தனர். அப்படி பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இருப்பவர்கள் அருகே உள்ள பொன்னேரி அரசு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

ஆனால் இப்படி சுத்தமும் சுகாதாரமும் இல்லாத இருந்ததால் இந்த சிறப்பு சிகிச்சை மையத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது நோயாளிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால், கொரோனா தொற்று ஏற்பட்ட பலர் சென்னை, பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். எனவே புதிதாக பொறுப்பேற்க உள்ள திருவள்ளூர் கலெக்டர் இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் இயங்கிவந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்னேரி பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: