பட்டாசு கடை வைக்க 6,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்பு துறை அதிகாரி கைது

சென்னை: பட்டாசு கடை அமைக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது  செய்தனர்.  கோவை ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகார்தாரர் தொடர்பு கொண்டு தான் தற்காலிகமாக பட்டாசு கடை  துவங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிருந்ததாகவும், விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோவை தெற்கு பிரிவு நிலைய தீயணைப்பு  அதிகாரி சசிகுமார் தனக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும், அதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கோவை தெற்குபிரிவு நிலைய தீயணைப்பு அதிகாரி சசிகுமார்  புகார்தாரரிடமிருந்து ₹6 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.

Related Stories: