பணியில் இறந்த போலீசின் மகனுக்கு அரசுவேலை வாட்ஸ்அப் தகவலால் வீட்டை கண்டுபிடித்து தெரிவித்த ஏட்டு

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமணி மனைவி பிரேமசுதா. இவர் நெல்லை தாமிரபரணி இரண்டாம் பட்டாலியன் போலீஸ் பிரிவில் பணி புரிந்து வந்தார். 8 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்தபோது பிரேமசுதா உயிரிழந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரேமசுதாவின் வாரிசுக்கு அரசு வேலை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணி நியமனத்தை வழங்கும்படியும் தமிழக அரசிடம் இருந்து தாமிரபரணி 2ம் பட்டாலியன் போலீஸ்பிரிவுக்கு கடிதம் வந்துள்ளது. அப்போது பிரமேசுதாவின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தேடியபோது கிடைக்கவில்லை.

இதையடுத்து எஸ்ஐ வசந்தி, ஆடியோ ஒன்றை பதிவு செய்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டார். இந்த ஆடியோவை களியக்காவிளை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் அனில்குமார் என்ற தலைமை காவலரும் பார்த்துள்ளார். அவர் மடத்துவிளையில் பிரேமசுதா குடும்பத்தினர் வசிப்பதை அறிந்தார். இதன்பின், அங்கு சென்று அவரது மகன் காட்வினிடம் தகவல் தெரிவித்தார்.

Related Stories: