சென்னையில் இருந்து மும்பைக்கு 10 கோடி செல்போன்களுடன் சென்ற கன்டெய்னரை கடத்திய கும்பல்: சூளகிரி அருகே டிரைவர்களின் கண்களை கட்டி புதரில் தள்ளினர்

சூளகிரி: சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற கன்டெய்னரை சூளகிரி அருகே மறித்த கும்பல், டிரைவர்களின் கண்ணை கட்டி சரமாரி தாக்கி  புதரில் தள்ளிவிட்டு 10 கோடி மதிப்பிலான செல்போன்களுடன், கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள தனியார்  செல்போன் கம்பெனியில் இருந்து, மும்பைக்கு ஒரு கன்டெய்னர் லாரியில் 10 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக்கொண்டு, நேற்று முன்தினம்  இரவு புறப்பட்டது. சென்னை பூந்தமல்லியை சேர்ந்த சதீஷ்குமார் (29), கோவையை சேர்ந்த அருண் (26) ஆகியோர் டிரைவர்களாக இருந்தனர். நேற்று  அதிகாலை 3 மணியளவில், கிருஷ்ணகிரி  மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலை பகுதியில் கன்டெய்னர் லாரி சென்றபோது, அவ்வழியாக வந்த 3  லாரிகள் திடீரென கன்டெய்னர் லாரியை வழிமறித்தன.

அதில் இருந்து இறங்கிய 20க்கும் மேற்பட்டவர்கள், கன்டெய்னர் லாரியில் இருந்த சதீஷ்குமார், அருண் ஆகியோரை மிரட்டி கீழே இறங்க வைத்து  சரமாரியாக தாக்கி கண்களை கட்டி புதரில் தள்ளி விட்டனர். பின்னர் கன்டெய்னர் லாரியை கடத்தி சென்றனர். நேற்று காலை  அவ்வழியாக வந்த  ஆம்புலன்ஸ் டிரைவர் புதரில் படுகாயத்துடன் இருந்த இருவரையும் ஏற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இதுபற்றி  சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி, அலகுபாவி பகுதியில் நிற்பது  தெரிந்து அங்கு சென்று ேபாலீசார்  சோதனையிட்டதில் செல்போன்கள் எதுவும் இல்ைல. கன்ெடய்னரை கடத்திய கும்பல், செல்போன்களை 3 லாரிகளில் ஏற்றிக்கொண்டு தப்பியுள்ளது  தெரியவந்தது.

 திட்டமிட்டு நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து, ஓசூர் டிஎஸ்பி முரளி தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் டிரைவர்களிடமும் விசாரணை நடத்தி  வருகின்றனர். 4 சிறப்பு தனிப்படை அமைத்து, 3 லாரிகளுடன் தப்பிய  20 பேர் கும்பலை ேதடி வருகின்றனர். இந்தியில் பேசினர்: சூளகிரி போலீசாரிடம் டிரைவர்கள் சதீஷ்குமார், அருண் ஆகியோர் கூறுகையில், ‘அந்த  கும்பலை சேர்ந்த சிலர், இந்தியில் பேசினர். எங்களுக்கு இந்தி தெரியாததால், அவர்கள் பேசியது எதுவும் புரியவில்லை’ என்றனர்.

Related Stories: