ரூ.3,737 கோடி ஒதுக்கீடு: விஜய தசமிக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும்...மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி.!!!

டெல்லி: 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையிலும், கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வரும் நிலையிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது.

மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தப்பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் ஊழியர்கள் வங்கியில் நேரடியாக வழங்கப்படும். 30 லட்சம் ஊழியர்களுக்கு 2019-2020 நிதியாண்டுக்கான போனஸ் வழங்க ரூ.3,737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வரும் திங்கள் கிழமை 26-ம் தேதி ஆயுதபூஜை மற்றும் அடுத்த மாதம் நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: