அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு: பிடென் ஒரு கிரிமினல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளரான  ஜோ பிடெனை அதிபர் டிரம்ப்பும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து அதிபர்  டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், “நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஜோ  பிடென் ஒரு கிரிமினல், அவர் நீண்ட காலமாக ஒரு கிரிமினலாக இருக்கிறார், அதைப் பற்றி புகார் அளிக்காத நீங்களும் (நிருபரை குறிப்பிட்டு) ஒரு  குற்றவாளி மற்றும் உங்கள் ஊடகமும் ஒரு குற்றவாளி’’ என கூறினார்.

மேலும் அமெரிக்க நோய்த்தொற்று நிபுணர் டாக்டர் அந்தோணி ஃபாசி மற்றும் பிற நிபுணர்களை முட்டாள்கள் என்று கூறினார். இது கடும் சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவில் எச்1பி விசாக்களை பெறுவதற்காக அதிபர் டிரம்ப் விதித்த புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து  ஏராளமான ஐடி நிறுவனங்கள், அமைப்புகள் அந்நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளன.

Related Stories: