அமெரிக்க அதிபர் டிரம்ப் மகன் பரபரப்பு பேச்சு பிடென் இந்தியாவிற்கு எதிரானவர்

நியூயார்க்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோபிடென் இந்தியாவிற்கு எதிரானவர் என அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் மீண்டும் போட்டியிடும் தனது தந்தை அதிபர் டிரம்புக்கு ஆதரவாக அவரது மகன் டிரம்ப் ஜூனியர் (42) பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நியூயார்க்கில் உள்ள லாங் தீவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் டிரம்ப் பேசுகையில், “ சீனாவின் அச்சுறுத்தலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த தேர்தலில்  சீனா, பிடெனுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்து அவரை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. ஏனென்றால் அவர் மிகப்பெரிய தொழிலதிபர், பிடெனை வாங்க முடியும் என்று அவர்களுக்கு தெரியும். எனவே தான் சீனாவை மென்மையாக கையாளு கிறார்கள். ஜோ பிடென் இந்தியாவிற்கு எதிரானவர், மோசமானவர். ஆனால் சீனாவிற்கு சாதகமானவர். இதை இந்திய அமெரிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories: