அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவை முந்தும் சக்தி வாய்ந்த ஆசிய நாடுகளில் சீனா முதலிடம்: 4வது இடத்தில் இந்தியா

சிட்னி: ஆஸ்திரேலிய நிறுவனம் நடத்திய ஆய்வில் சக்தி வாய்ந்த பத்து ஆசிய நாடுகள் குறியீடு பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த நாடு எது என்பதை நிர்ணயிப்பதில் நிறைய அம்சங்கள் உள்ளன. ஒரு நாட்டினுடைய ஆற்றல் குறியீடு, ராணுவப் பாதுகாப்பு, பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் மற்றும் ஆயுதம் தொடர்பான விவகாரங்கள், நாட்டின் வருமானம், அண்டை நாடுகளுடனான உறவு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சிட்னியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லோயி ஆராய்ச்சி நிறுவனம் சக்தி வாய்ந்த ஆசிய நாடு மற்றும் தூதரக உறவு என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இது குறித்து ஆராய்ச்சி குழுவின் தலைவர் ஹெர்வி லெமாஹியூ கூறியதாவது:

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தை பொருத்தவரை அமெரிக்காவின் ஆதிக்கமே அங்கு முதலிடத்தில் உள்ளது. அதே நேரம், கொரோனாவை அமெரிக்கா கையாண்ட விதத்தினால் அதனுடைய புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சீனாவின் ஆதிக்கம் உள்ளது. இன்னும் பத்து ஆண்டுகளின் இறுதியில் அமெரிக்காவை கணிசமான வித்தியாசத்தில் மிஞ்ச வாய்ப்பு இருக்கிறது. சக்தி வாய்ந்த ஆசிய நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதே போல, ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில், சீனா தொடர்ந்து 3வது ஆண்டாக 2வது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஜப்பானும், 4வது இடத்தை பிடித்துள்ள இந்தியா, கொரோனா பாதிப்பினால் பொருளாதார வளர்ச்சியை இழந்து விட்டது. கடந்தாண்டு 50 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, சீனாவுடன் ஒப்பிடுகையில் 2030ம் ஆண்டில் தான் 40 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, சிங்கப்பூர். தாய்லாந்து, மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ளன.

* பொருளாதாரத்தில் மீண்ட முதல் நாடு

கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையில் இருந்து, உலகின் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடான சீனா, நடப்பாண்டிலேயே அதி வேகமாக மீண்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதார பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. ஆனால், அமெரிக்காவினால், 2024ல் கூட கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலையை அடைய முடியாது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 4.9 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்தாண்டு, இதே கால கட்டத்தில் 3.2 சதவீதமாக இருந்தது. மருந்து வினியோகம், முகக்கவசம் ஏற்றுமதி, நுகர்வோர் தேவை ஆகியவற்றினால் சில்லரை வர்த்தகம் அதிகரித்து, உற்பத்தி துறை கொரோனாவுக்கு முந்தைய காலத்தை எட்டியுள்ளது.

Related Stories: