7.5% உள் ஒதுக்கீட்டில் கவர்னருக்கு அழுத்தம் தராதது முதல்வர் மாணவர்களுக்கு செய்யும் துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடதுக்கீடு விவகாரத்தில், கவர்னருக்கு, முதல்வர் அழுத்தம் கொடுக்காதது அந்த மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

மருத்துவ கல்விக்கான நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்று வரை கவர்னர் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் கவர்னருக்கு கொடுக்காமல் முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும், அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ‘கவர்னர், முதல்வர், மத்திய பாஜ அரசு’ ஒரு ரகசிய கூட்டணி அமைத்து, நீர்த்து போக வைத்தது போல், அரசு பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்து போக வைத்து விடக்கூடாது. நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>