சொல்லிட்டாங்க...

6 ஆண்டுகளில் பல துறைகளிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் இதன் வேகம் மற்றும் நோக்கம் அதிகரித்து வருகிறது. - பிரதமர் நரேந்திர மோடி

மத்தியஅரசின் புதிய வேளாண்மை சட்டத்தை அனுமதித்தால் பொதுத்துறை நிறுவனங்களைப் போல வேளாண்மையும் அழிந்துவிடும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநிலஅரசின் அதிகாரங்களையும், அரசு டாக்டர்களின் உரிமைகளையும் பறிக்கும் வகையில்தான் மத்தியஅரசு செயல்படுகிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

நீட் தேர்வு சட்ட மசோதாக்களை மத்தியஅரசு நிராகரித்ததை மூடி மறைத்ததுபோல, மருத்துவ மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விவகாரத்திலும் தமிழகஅரசு ஏமாற்றுகிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Related Stories:

>