சபரிமலை வந்த தமிழக பக்தருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த தமிழக பக்தருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது.  இந்த பூஜைக்காக சபரிமலையில் 7 மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 250 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பதிவு   செய்யும்போது 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழை இணைக்க வேண்டும்.

இது தவிர சபரிமலை வந்த பின்னரும் பக்தர்களுக்கு கொரோனா  பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் நேற்று நடந்த பரிசோதனையில்,  தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர், பத்தனம்திட்டா ரான்னியில் உள்ள கொரோனா சிகிச்சை  மையத்தில் சேர்க்கப்பட்டார். இவர் தனியாக வந்ததால், மற்றவர்களுக்கு தொற்று இல்லை.

Related Stories: