தமிழகத்தில் முதன்முறையாக சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 35,000 லி. திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்

சேலம்: சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மாவட்டத்தில் சேலம் அரசு மருத்துமனையில் தான், வெண்டிலேட்டர் வசதி கூடுதலாக உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் ெகாரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சேலம் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே, கொரோனா நோயாளிகளுக்கு வசதியாக, தமிழகத்திலேயே முதன்முறையாக, சேலம் அரசு மருத்துவமனையில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், “சேலம் அரசு மருத்துவமனையில், ஏற்கனவே பல இடங்களில் சுமார் 13 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளை கருத்தில் கொண்டு, கூடுதலாக ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்திலேயே முதன்முறையாக, 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் சேலம் அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பழைய டீன் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பிளாக்கிற்கு அருகிலேயே இந்த சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: