தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், காவலர்கள், துப்புறவு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உலக தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இதனையடுத்து, கொரோனா பேரிடரின் போது சிறப்பாக செயல்பட்டதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும், கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்ட போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமனுக்கு நிகரற்ற சேவைக்கான விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கி பெருமை சேர்த்தனர்.

மேலும்,  ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் இரண்டு பேர், திரைத்துறையைச் சேர்ந்த வடிவுக்கரசி, ரோபோ சங்கர், வையாபுரி, சிங்கமுத்து ஆகியோருக்கும் விருது வழங்கி ராதாகிருஷ்ணன் கவுரவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: