அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா சொந்த ஊரில் கட்சி கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தலைமையகத்தில் ஓபிஎஸ் பங்கேற்பு

சேலம்: அதிமுகவின் 49வது ஆண்டு துவக்கவிழாவையொட்டி சேலத்தில் தங்கியிருக்கும் முதல்வரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நேற்று காலை கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக முதல்வரின் வீட்டருகில் இருந்த அதிமுக கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, அதற்கருகில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. காலை 8.35மணிக்கு மேடைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

முதல்வர், இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்னை புறப்பட்டு செல்வார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10.50 மணிக்கு அதிமுக கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Related Stories: