அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குற்றங்கள் குறித்து ஆலோசனை விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் மீனாட்சி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விளக்கமளித்தார் .முகாமில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி, மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் மதியரசன் சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு விளக்கி பேசினர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இதில் வார்டு உறுப்பினர்கள் கோமதிநாயகம் , விஜயா சிவகுமார் , பதிபூரணம் கஜேந்திரன், துளசி பாய் சுந்தரம், சந்தியா மூவேந்தன், சுமதி சங்கர், அருள் ஜோதி, தீபன் சக்கரவர்த்தி ஊராட்சி செயலர் பொற்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முகாமில் கலந்துகொண்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஊராட்சி சார்பில் புறக்காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் காவலர்கள் நியமிக்க வேண்டும். பொதுமக்கள் சார்பாக கஞ்சா மது போதையில் சுற்றித்திரியும் குடிமகன்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  

Related Stories: