கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி சொத்து முடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. ரூ.8.6 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் வெளிநாட்டு பங்கு பத்திரங்களை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. வெளிநாடுகளில் 1.55 லட்சம் டாலர் அளவுக்கு பங்குகளில் அனுமதியின்றி முதலீடு செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டில் கிடைத்த ரூ.8 கோடி லாபத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.8 கோடி லாபத்தை கொண்டு வராததால் அதற்கு சமமான மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

Related Stories: