பெய்ஜிங் : 2020 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி கொண்ட மிகச் சில நாடுகளில் சீனாவும் ஒன்றாக இருக்கும் என சர்வதேச நிதியத்தின், நிதி விவகாரங்க ளுக்கான துறை இயக்குனர் விட்டொர் காஸ்பர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் தோன்றிய கொரோனா தொற்று, சில வாரங்களில் பலவற்றில் பரவியது. அதைத் தொடர்ந்து போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் சரிய தொடங்கியது. தெற்காசியாவில் உள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி அடிப்படையிலான தனிநபர் சராசரி வருமானம் வங்கதேசத்தை விட குறைவாக இருக்கும் என்று ஐ.எம்.எப். அடிக்கும் எச்சரிக்கை மணியாகும்.