திண்டுக்கல் அருகே பெண் நரபலி கொடுத்த விவகாரம்.: காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

திண்டுக்கல்: தோட்டத்து வேலைக்கு சென்ற பெண் நரபலி கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த ராதிகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது தாயார் அஜலட்சுமி தோட்ட வேலைக்கு சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ள அவர், இந்த வழக்கில் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். நிலத்தின் உரிமையாளர் சாந்தாவும், தனது தாயாரும் தங்கி இருந்த அறைக்குள் வெளி நபர்கள் வந்து தாக்குதல் நடத்தியதற்கான தடயங்கள் இல்லை.

எனவே தனது தாயார் சாவில் சந்தேகம் இருப்பதால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: