மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் ரெய்டு; ரூ.2.30கோடி சிக்கியது: அதிகாரிகள் தொடர்ந்து சோதனை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை அடுத்த பாரதி நகர் பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  வேலூர் மண்டல சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பன்னீர்செல்வம் தொழிற்சாலை சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு லஞ்சம் வருவதாக வந்த தகவலை அடுத்து நேற்று காட்பாடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலூர் மண்டல சுற்றுச்சூழல் இணை பொறியாளரான பன்னீர் செல்வம் என்பவரை காரை பின் தொடர்ந்து சென்று காட்பாடி பகுதியில் உள்ள அவரது தனி வீட்டில் சோதனையிட்டதில் அவரிடம் இருந்து கணக்கில் வராத 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான வீட்டில் இன்று தற்போது சுமார் 7 முதல் 10 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.2.30கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 3.6 கிலோ தங்க நகைகள்,  ஆறரை கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சோதனை நடக்கிறது.

Related Stories: