'தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை' - ராகுல் காந்தி

டெல்லி: ஹத்ராஸ் சம்பவம் குறித்து உ.பி. அரசின் செயல்பாடுகளை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண், 5 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டதால் இறந்தார். இரவோடு இரவாக அவரது சடலத்தை போலீசார் எரித்ததால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இதனிடையே ஹத்ராஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில் அந்த 19 வயதுப் பெண்ணின் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளார் என்றும் உத்தர பிரதேச காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் குறித்து விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. அதில்; ஹத்ராஸ் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறிய நிலையில், போலீசார் மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இந்த செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி டிவிட்டரில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்; தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை; ஹத்ராஸ் பெண்ணை அவர்கள் ஒரு மனிதராக கருதாததால் தான் யாருமே பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என முதல்வரும், காவல்துறையினரும் கூறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: