டிரம்ப் - பிடென் பங்கேற்கும் 2வது நேரடி விவாதம் ரத்து

வாஷிங்டன்:  அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடென் இடையிலான முதல்  நேரடி விவாத  நிகழ்ச்சி ஒகியோவில் உள்ள கிளிவ்லேண்டில் கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. பிறகு, டிரம்ப் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, வால்டர் ரீட் ராணுவ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால், மியாமியில் நடைபெறும் 2வது நேரடி விவாத நிகழ்ச்சி காணொலி மூலம் நடத்தப்படும்  என கூறப்பட்டது.ஆனால், காணொலி காட்சி மூலம் விவாதம் நடந்தால், அதில் கலந்து கொள்ள மாட்டேன்   என்று டிரம்ப் அறிவித்தார்.

இதனால்,  2வது நேரடி விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், டென்னிசில் உள்ள நாஷ்வில்லேயில் வரும் 22ம் தேதி   3ம் கட்ட நேரடி விவாதத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: