ஹத்ராஸ் சம்பவத்தை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது: கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: ஹத்ராஸ் சம்பவத்தை மூடி மறைக்க அரசு முயற்சிப்பதாக கனிமொழி குற்றம் சாட்டினார். திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடியிலிருந்து நேற்று மதியம் விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் கனிமொழி கூறியதாவது:  மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து  அவர்களுக்கு புரியாத மொழியை திணித்து வருகிறது. இந்தியை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலையை கட்டாயமாக்குகிறது. ரயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்தால் வரும் குறுந்தகவல் கூட இந்தியில் தான் வருகிறது. இதனால் குறுந்தகவலில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை கூட மக்களால் படிக்க முடியாது. மத்திய அரசு குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் இந்தியை புகுத்துவதையே தொடர்ந்து செய்வது மோசமான விளைவுகளை உருவாக்கும்.

ஹத்ராசில் நடந்த சம்பவத்தை மூடி மறைக்க தான் அரசு முயற்சி செய்து கொண்டு இருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவிடாமல் இறுதி சடங்குகளையும் போலீசாரே நடத்தி உள்ளனர். இதை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளரை படாத பாடுபடுத்தி உள்ளனர். குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்காமல் மூடி மறைக்கவும், அங்கு செல்ல கூடியவர்களை தடுப்பது அரசியல் கட்சி தலைவர்களை தாக்குவது என்று தான் செயல்படுகின்றனர். இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி தாக்கப்பட்டு உள்ளார். மூடி மறைக்கத் தான் அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: