கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாத 2 தொழிற்சாலைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: பொன்னேரி கோட்டாட்சியர் அதிரடி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றாமல்  வேலை செய்கின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு பரவலாக நாளுக்கு நாள் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா,  கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேல் உள்ளிட்ட அதிகாரிகள் இரும்பு உருக்காலைகள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற்சாலைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது ஏ.ஆர்.எஸ். இரும்பு உருக்காலை, டால்மியா கோனி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியும் பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்தது தெரிந்தது. அதைத் தொடர்ந்து மேற்கண்ட  2 தொழிற்சாலைகளுக்கும் கோட்டாட்சியர் ரூ.10,000 அபராதம் விதித்தார்.

Related Stories: