திருத்தணி அருகே நெடுஞ்சாலையை சூழ்ந்த செடிகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருத்தணி: திருத்தணி அருகே நெடுஞ்சாலையை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து கன்னிகாபுரம், மாம்பாக்கம் சத்திரம், ராமகிருஷ்ணாபுரம், சாமுண்

டிபுரம் வழியாக சோளிங்கர் வரை சுமார் 25 கி.மீ. மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லை பராமரிப்பில் உள்ளது. தற்போது இந்த சாலையின் இரண்டுபுறமும்  விஷச் செடிகள் சுமார் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளதால் சாலையை ஆக்கிரமித்து கிடக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நடந்துவிடுகிறது. செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் விடுத்த கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரிய

வில்லை. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘’ சோளிங்கர் வரை செல்லும் சாலையில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்துக்கள் நடைபெறுகிறது. புதரில் இருந்து பாம்பு உள்ளிட்டவைகளும் சாலைக்கு வந்துவிடுகிறது. எனவே, உடனடியாக செடிகளை அகற்றவேண்டும்’ என்றனர்.

Related Stories: