தனியார் ஆஸ்பத்திரியில் 3 நாட்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு தடை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு எவ்வளவு தான் முன்எச்சரிக்கை எடுத்த போதிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி ெகாண்டு இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளை அரசு குறைத்து கூறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை முடிவதற்குள் தற்போது மேலும் ஒரு சர்ச்சையை கோவை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. அதாவது மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பு, உயிரிழப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களை காட்டி தனியார் மருத்துவமனைகளில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் யாருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக்கூடாது என்று கோவை மாவட்ட கலெக்டர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு மருத்துவமனையில் சிறிய ஆபரேசன் முதல் பெரிய ஆபரேசன் வரை என்ன செய்தாலும் முதலில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பரிசோதனை செய்தால் தான் அறுவை சிகிச்சையை நடந்து வருகிறது. அப்படியிருக்கும் போது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம் என்ற கலெக்டரின் திடீர் உத்தரவால் தனியார் மருத்துவமனைகளில் ஆபரேசன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு கொரோனா பரிசோதனை மட்டும் செய்தால் போதும் என்றும் ஒரு உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுவும் முக்கியமானவர்களுக்கு மட்டும் செய்தால் போதும். மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம் என்றும் கலெக்டர் வாய்மொழியாக கூறியதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவ்வளவு பேர் வரக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு திடீரென ஒரு உத்தரவு மற்றும் அரசு மருத்துவமனையில் முக்கியமானவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்தால் போதும் என்ற உத்தரவு மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது.

Related Stories: