விவசாயிகள் வேளாண் மசோதாக்களை வரவேற்றுள்ளனர்: பஞ்சாப் அரசால் அங்கு ஆர்ப்பாட்டம்: மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி.!!!

கோவா: விவசாயிகள் பண்ணை மசோதாக்களை வரவேற்றுள்ளனர் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டத்திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், கோவாவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை பிரகாஷ் ஜவடேகர், விவசாயிகள் பண்ணை மசோதாக்களை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இந்த சட்டங்களுடன் ஒன் நேஷன், ஒன்  மார்க்கெட் சூத்திரத்தை கொண்டு வருவதை பிரதமர் மோடி நோக்கமாகக் கொண்டுள்ளார் என்று கூறினார். பிரதமர் மோடிக்கு தேசத்தைப் பற்றி ஒரு பெரிய சிந்தனை இருக்கிறது. ஜிஎஸ்டி காரணமாக எங்களுக்கு ஒரு நாடு, ஒரு வரி உள்ளது.  வேளாண் திருத்தச் சட்டங்கள் மூலம் ஒரு நாடு, ஒரு சந்தை உருவாகும். தேசிய சோதனைக்கான நாங்கள் ஒரு தேசம், ஒரு ரேஷன் கார்டையும் அறிவித்துள்ளோம் என்றார்.

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து கேட்டபோது, ​​பஞ்சாபைத் தவிர இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள் எங்கே நடக்கின்றன? அதுவும் அவர்களின் அரசாங்கத்தின் காரணமாகவே நடக்கிறது, ஆர்ப்பாட்டம் மற்ற எல்லா  இடங்களிலும் முடிந்துவிட்டது என்று பதிலளித்தார். உண்மையில், விவசாயிகள் பண்ணை மசோதாக்களை வரவேற்றுள்ளனர் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

Related Stories: