நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்: குழப்பத்தில் இல்லத்தரசிகள்: சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,800-க்கு விற்பனை...!

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம்(1ம் தேதி)  தங்கம் விலை கிராமுக்கு 6 அதிகரித்து ஒரு கிராம் 4,815க்கும், சவரனுக்கு 48 அதிகரித்து ஒரு சவரன் 38,520க்கும் விற்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு 54 அதிகரித்து ஒரு கிராம் 4,869க்கும், சவரனுக்கு 432 அதிகரித்து ஒரு சவரன் 38,952க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே  நாளில் சவரன் 432 அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் மீண்டும் சவரன் 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நகை வாங்குவோரை ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு 19 குறைந்து ரூ.4850க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும்,  தங்கம் விலை ஏற்றமும் இறக்கமும் என மாறி மாறி வருவது இல்லத்தரசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய விலையில் மாற்றமின்றி வெள்ளி கிராம் ரூ.64.70-க்கும் கிலோ ரூ.64,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: