திமுகவினர் சாலை மறியல்

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. அரசு சார்பில் நடந்த விழாவில், அதிமுக சார்பில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், பெரும்புதூர் எம்எல்ஏ பழனி ஆகியோர் மட்டும் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த விழாவில், பெரும்புதூர் எம்பி டி.ஆர். பாலு, ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் ஆகியோர் திமுக பிரமுகர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வேண்டுமென்றே, அவர்களை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் சார்பில் திமுகவினர், 200க்கும் மேற்பட்டோர், மாங்காடு செல்லும் பிரதான சாலை, மவுலிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். திமுகவினரின் மறியல் போராட்டத்தால், அமைச்சர் பென்ஜமின், எம்எல்ஏ பழனி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில அரசு அதிகாரிகள் மட்டுமே பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.

Related Stories:

>