கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 95,480 கோடி

புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 95,480 கோடி வசூலாகியுள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 95,480 கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 10.4 சதவீதமும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 4 சதவீதமும் அதிகம்.  கடந்த மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி 17,741 கோடி, மாநில ஜிஎஸ்டி 23,131 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 47,484 கோடி மற்றும் இறக்குமதி வரி 22,442 கோடி அடங்கம். செஸ் வரி 7,124 கோடி வசூலாகியுள்ளது. இதில் இறக்குமதி வரி 788 கோடி அடங்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டிக்கு 21260 கோடி, மாநில ஜிஎஸ்டிக்கு 16,997 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: