வாலாஜாபாத் ஊராட்சிகளில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இதில் 59 ஊராட்சிகளில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பில்லாத அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கும் பணி நடைபெறுகிறது. இத்திட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு எவ்வாறு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் குடிநீருக்காக எந்தெந்த பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்படுகின்றன என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் உடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி 4 மற்றும் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 28 கட்டப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட திட்ட அலுவலர் இதன் தரம் குறித்தும், இதன் மூலம் எத்தனை வீடுகள் பயன் அடையும் என்பது குறித்து ஒன்றிய  பொறியாளர்கள் இடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட ஒன்றிய பொறியாளர்கள் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: