கொரோனா தடுப்பூசியை வாங்க 80 ஆயிரம் கோடி வச்சுருக்கீங்களா? மத்திய அரசிடம் பேரம் பேசுகிறது சீரம்

புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு 80 ஆயிரம் கோடியை செலவிடத் தயாராக இருக்கிறதா?’ என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா கேட்டுள்ளார். கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதை  தயாரிக்க,  புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பற்றி இ்ந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா, டிவிட்டரில் நேற்று வௌியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:  ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி 1,000 என்ற மதிப்பில் கிடைக்கச் செய்ய முடியும். இந்தியாவுக்கு ஒரு மாதத்தில் சராசரியாக 30 லட்சம் டோஸ்கள் தேவைப்படும்.

இந்த கணக்கில் விநியோகம் செய்தால்தான் 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் எல்லோரிடமும் தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடியும். இதை பாதுகாப்பது, விநியோகம் செய்வதற்கான உள்கட்டமைப்புகளை செய்வது, பெரும் ஜனத்தொகைக்கு வழங்குவது போன்றவற்றுக்கு 80 ஆயிரம் கோடி தேவைப்படும். இதை செலவிட மத்திய அரசு தயாராக உள்ளதா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய தடுப்பூசி நிலை?

கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ‘கொரோனாவுக்கு இந்தியாவிலேயே  3 தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன. ஒவ்வோ்ரு இந்தியருக்கும் அது கிடைக்கச் செய்யும் திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அனுமதி கொடுத்து விட்டால் தயாரிப்பைத் தொடங்கி விடுவோம்,’ என்று கூறினார். ஆனால், இந்த தடுப்பு மருந்துகளின் நிலை என்ன என்பது இப்போது வரை தெரியவில்லை.

Related Stories: