நாராயணசாமி பேட்டி: வேளாண் சட்டங்களால் ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம்

சென்னை: சென்னை விமானநிலையத்தில்  புதுவை முதல்வர் நாராயணசாமி  அளித்த பேட்டி: வேளாண் சட்டங்கள்  விவசாயிகளுக்கு பயன் தராது. . ஒருங்கிணைந்த மார்க்கெட் கமிட்டி எல்லா  மாநிலங்களிலும்  உள்ளது. அதில் நிர்ணயிக்கப்பட்ட விலை உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும். தற்போது அந்த கமிட்டியை முழுமையாக ஒழித்து விட்டார்கள். இதனால் பதுக்கல், கள்ள மார்க்கெட் அதிகரிக்கும். அதோடு நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் ஏழை, எளிய வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: