மத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: ரயில்வே துறையில் தனியாரை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நேற்று  ரயில்வே ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதி சங்க செயலாளர் முரளி தலைமை தாங்கினார். சூர்யபிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாவட்ட செயலாளர் பி.துளசிநாராயணன், ஆறுமுகம், கிரிதர், அர்ஜுன், லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தொடர்ந்து, சங்கத்தினர் ரயில்வே துறையில் தனியாரை அனுமதிக்ககூடாது. 30 வருடம் பணியாற்றியவர்களுக்கு கட்டாய பணி மூப்பு தரக்கூடாது. கொரோனாவை காரணம் காட்டி பணி மூப்பில் குளறுபடியை சரிசெய்யக்கூடாது. கொரோனா பாதித்த ரயில்வே ஊழியர்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள விடுமுறை வழங்கவேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: