இந்திய பண்பாட்டின் தோற்றம் குறித்து ஆய்வு குழுவை செயல்படுத்த விடக்கூடாது: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவை செயல்படுத்தகூடாது என்று மத்திய அரசை தமிழக வலியுறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளார் பாலகிருஷணன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அவர் எழுதியுள்ள கடிதம்:

12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் தமிழர்கள், தென்னிந்தியர்கள், வடகிழக்கு இந்தியர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மற்றும் பெண் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.

இதன் மூலம் இந்திய கலாச்சார பன்முகத் தன்மை, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரம் புறக்கணிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இக்குழு ஆய்வறிக்கை இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளங்களை அழித்து விடும் ஆபத்து உள்ளது. எனவே இந்த ஆய்வுக்குழுவை செயல்படுத்தக் கூடாது என தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். மேலும், ஆய்வுக்குழுவின் பணிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: