301 மில்லியன் டன்னாக நிர்ணயம் உணவு தானிய உற்பத்தி இலக்கு 1.5% அதிகரிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு உணவு உற்பத்தி இலக்கை, 2020-21 அறுவடை ஆண்டுக்கு 301 மில்லியன் டன்னாக நிர்ணயித்துள்ளது.   கடந்த 2019-20 அறுவடை ஆண்டில் நாட்டின் உணவு உற்பத்தி 296.65 மில்லியன் டன்களாக இருந்தது. இந்நிலையில், நடப்பு 2020-21 (ஜூலை - ஜூன்) அறுவடை ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நடப்பு 2020-21 அறுவடை ஆண்டில் உணவு தானிய உற்பத்தி இலக்கு 301 மில்லியன் டன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1.5 சதவீதம் அதிகம்.

 அரிசி உற்பத்தி இலக்கு, கடந்த ஆண்டு 118.43 மில்லியன் டன்களாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 119.6 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்படுகிறது.

இதுபோல், கோதுமை உற்பத்தி 108 மில்லியன் டன்களாகவும், பருப்பு உற்பத்தி 25.60 மில்லியன் டன்களாகவும், எண்ணெய் வித்துக்கள் 37 மில்லியன் டன்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: