கஞ்சா விற்றவர்கள் கைது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் 2 வாலிபர்கள் கஞ்சா வைத்திருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் மாறுவேடத்தில் சென்று சோதனையிட்டனர். இதையறிந்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதைக்கண்ட போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த முருகன்(23), ராகுல்(21)  என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல், வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வெங்கல் ஏரிக்கரை பகுதியில் 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வெங்கல் ஒட்டர்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (28)  என்பவரை கைது செய்தனர்.

புழல்: சோழவரம் போலீசார் காரனோடை, ஆத்தூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரனோடை மாந்தோப்பு அருகே போலீசார் சென்றபோது, அங்கிருந்து 4 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது. அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

விசாரணையில், காரனோடையை சேர்ந்த ஐயப்பன் (38). சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (24). சோத்துபெரும்பேடு பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (23). கம்மவார்பாளையத்தை சேர்ந்த பிரபா (எ) பிரபாகரன் (30) எனத் தெரியவந்தது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பெயின்டர் வீட்டில் கொள்ளை: கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (58). பெயின்டர். இவரது மனைவி ஷாபிரா.  

கடந்த 16ம் தேதி ஷாபிரா அருகே உள்ள ரேஷனில் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.  சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13.5 சவரன் தங்க நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து, புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டக்கரை நேதாஜி நகரை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து நகையை மீட்டனர். இவர் தேர்வழி ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: