கொரோனா பெயரில் பொய் கணக்கு: ஜெயரஞ்சன், பொருளாதார நிபுணர்

கொரோனாநோய்த் தடுப்புப் பணிகளுக்கு செய்த செலவு என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி செய்துள்ளனர். உதாரணமாக, கொரோனா முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் கட்டில் வாங்கவேண்டும் என்றால் அதில் வாங்கிய தொகையை விட கூடுலாக பில் எழுதி அதை கணக்கு காண்பித்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, ரூ2 ஆயிரத்திற்கு வாங்கக்கூடிய கட்டில் ரூ10 ஆயிரம் என பில் போட்டு அதை கணக்கு காண்பித்தால் என்ன செய்ய முடியும். இதேபோல், கட்டில் மட்டும் இல்லாமல் மெத்தை, பெட்சீட், தலையணை உள்ளிட்ட அனைத்து பொருளிலும் கூடுதலாக கணக்கு காண்பித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

இதில் வரும் கமிஷன் தொகையை அதிகாரிகள் முதல் அனைவருக்கும் பகிர்ந்துகொள்வார்கள். இதுபோல் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவது அனைத்திலும் ஊழல் நடப்பதால், இப்போது கூறப்பட்ட கோடிக்கணக்கிலான செலவு விவரங்களை எப்படி உண்மை என  நம்ப முடியும். கொரோனா தடுப்பு பணிக்கு மொத்தமாக 7 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்துள்ளார்கள். தற்போது மேலும் ஒரு பிரச்னை எழுந்து வருகிறது. அது என்னவென்றால், கொரோனா என்று பொய் சொல்லி மருத்துவமனைகளுக்கு ஆள் பிடித்து தந்தால் அவர்களுக்கு கமிஷன் என்றும் ஒரு பிரச்னை தற்போது எழுந்துள்ளது.

ஒரு நபருக்கு இவ்வளவு என்று கமிஷன் ரீதியாக ஆள்பிடிப்பதாக கூறப்படுகிறது. பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளுக்கு டெண்டர் விட்டால் அது காலதாமதம் ஆகும் என்பதால் டெண்டர் விடாமல் நேரடியாக செலவு செய்வார்கள். அதேபோல், கொரோனா பேரிடர் காலத்தில் டெண்டர் விட்டு எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள முடியாது என்பதால் இவர்கள் இஷ்டத்திற்கு கணக்கு காண்பித்து கொரோனாவிற்கு செலவு செய்துள்ளனர். மருந்து கண்டுபிடிக்காத ஒரு நோய்க்கு ரூ7 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. மருத்துவமனைகளில் ஆரம்பத்தில் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவுகளுக்கு அதிக அளவில் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நாளடைவில் உணவுகளுக்கும் சரியான வகையில் செலவு செய்யாமல் தரம் இல்லாத உணவுகளையே கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுபோன்று கொரோனா தடுப்பு விவகாரங்களில் பல்வேறு பிரச்னைகள் உள்ளபோது செலவு செய்யப்பட்ட பணம் எவ்வளவு, எந்த பொருள் எவ்வளவுக்கு வாங்கப்பட்டது என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும். கடந்த 6 மாதமாக கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, ஒரு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே, அரசு இந்த விவகாரத்தில் எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து உண்மையான விவரத்தை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழகம் பொருளாதார இழப்பில் சிக்கித்தவிக்கும் சூழலில் அனைவருக்கும் தெரியும் வகையில் விவரங்களை அரசு வெளியிட்டால் அது சரியாக இருக்கும். மருந்து கண்டுபிடிக்காத ஒரு நோய்க்கு 7 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. கொரோனா தடுப்பு விவகாரங்களில் பல்வேறு பிரச்னைகள் உள்ளபோது செலவு செய்யப்பட்ட பணம் எவ்வளவு, எந்த பொருள் எவ்வளவுக்கு வாங்கப்பட்டது என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்.

Related Stories: