திருவள்ளூர்: விளம்பர போர்டு அமைக்கும் மின்சாரம் பாய்ந்து 3 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள கடை ஒன்றின் விளம்பர போர்டு அமைப்பதற்காக கருணாகரன், அருண், பாளையம் ஆகிய 3 பேரும் வேலை செய்து கொண்டிருந்தனர். விளம்பர போர்டை மேலே தூக்கியபோது உயர்அழுத்த மின்சார கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேருக்கும் அதிகளவில் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்தனர். உடனடியாக பாமக நிர்வாகிகள் வ.பாலயோகி, நா.வெங்கடேஷன், இ.தினேஷ்குமார், ஊராட்சி செயலர் மகேந்திரன் ஆகியோர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
