கொடியேற்றத்துடன் திருப்பதி பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. கலியுக தெய்வமான சீனிவாச பெருமாளுக்கு முதலில் பிரம்மதேவன் உற்சவத்தை நடத்தியதால் பிரமோற்சவம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம் அன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் வருடாந்திர பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது. அதன்படி பிரமோற்சவம் நடைபெறும் நாட்களில் பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்தி தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். அதன்படி. இந்தாண்டு பிரமோற்சவத்தையொட்டி இன்று மாலை ஏழுமலையான் கோயிலில் அங்குரார்பணம் நடைபெறுகிறது.

பின்னர்,  பிரமோற்சவம் நாளை மாலை 6.03 மணி முதல் 6.30 மணிக்குள் மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதரராக மலையப்ப சுவாமி சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பார்.

Related Stories: