கடினமான காலத்தில் கூடுதல் வலிமையை பெற வேண்டும்..!! பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சவாலான இந்நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துக்கள் என அவர் பதிவு செய்துள்ளார். பிரதமர் மோடி தனது 70 வது பிறந்த தினத்தை இன்று காண்கிறார். இதை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த் மரியாதைக்குரிய அன்பு மோடி ஜி. உறுதியானவரான நீங்கள் இதுபோன்ற கடினமான காலத்தில் கூடுதல் வலிமை பெற வாழ்த்துகிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: