மத்திய அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய கலால்வரி, ஜி.எஸ்.டி பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கலால் வரி, ஜி.எஸ்.டி அலுவலகங்களில் நியமனமான 197 இடங்களில் தமிழர்களுக்கு குறைந்த அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2017ல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 197 மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நியமனமான 197 பேரில் 20க்கும் குறைவாகவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். மத்திய அரசுப்பணிகளில் வட இந்தியர்களுக்கு கூடுதல் இடம்தரும் வகையில் இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளில் 60,000 இடங்கள் நிரப்பப்பட்டதில் தென்னிந்தியர்கள் 1% கூட தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. டெல்லி, பீகார், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களே நியமனமாகின்றனர். வட இந்தியாவில் நடைபெறும் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதும் அம்பலமாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் திட்டமிட்டு வடஇந்தியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவது அநீதி என்று பலதரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: