அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை

*முன்னோடி விவசாயி தொழில்நுட்ப ஆலோசனை

அரவக்குறிச்சி : முருங்கை மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து முன்னோடி விவசாயி ஈசநத்தம் செல்வராஜ் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனை கூறியுள்ளார்.முருங்கையில் தேயிலை கொசு பாதிப்பின் அறிகுறிகள்: இலை மற்றும் நுனிக் குருத்துகள் வாடுதல் அடையும். காயின் வெளிப்புறத்தில் சொறி காணப்படும். பூச்சி தாக்குதலை கண்காணித்து சேதமடைந்த கிளைகள் மற்றும் காய்களை அழித்தல் வேண்டும். வயலைச் சுற்றி வேம்பு, கொய்யா, முந்திரி போன்ற மரங்களை தவிர்க்க வேண்டும். பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையில், 100 மிலி தண்ணீருக்கு 3 மிலி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.

1 லி தண்ணீரில் பியூவேரியா பாசியானா மருந்துகள் 2 கிராம் கலந்து தெளிக்கலாம்.இயற்கை எதிரிகளை பாதுகாக்கும் முறைகள்: பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை 3 முறை புதிய தளிர்கள், காய்கள் உருவாகுதல் மற்றும் முதிர்ச்சி பருவத்தில் தெளிக்கலாம்.1 லி தண்ணீரில் கிலோதியானிடின் EDG 1 கிராம் கலந்து தெளிக்கலாம்.

முருங்கையில் காய் ஈயினால் ஏற்படும் அறிகுறிகள்: காய்கள் நுனி காய்ந்து பிளந்து காணப்படும். காய்களில் தேன் போன்ற திரவம் வடியும். இதற்கு, காய்ந்து விழுந்த காய்களை அழித்தல் வேண்டும், மரங்களைச் சுற்றியுள்ள நிலத்தை உழுதல் வேண்டும். தயாமெதாக்சம் 1 லி தண்ணீரில் 2 கிராம் கலந்து, மண்ணில் நடவு செய்த பிறகு 150, 180 மற்றும் 210 நாட்களில் தெளிக்க வேண்டும்.

நிம்பிசிடின் 1 லி தண்ணீரில் 3.0 மிலி கலந்து, 50 சதம் காய் உருவான தருணம் மற்றும் 35 நாட்கள் கழித்து தெளிக்கவும். ஸ்பினோசாட் 45 SC 10 லி தண்ணீரில் 2.5 மிலி கலந்து தெளித்தல் வேண்டும்.மொக்குப்புழு தாக்குதலின் அறிகுறிகள்: முருங்கை பூ மொக்குகளை புழுக்கள் துளையிட்டு சாப்பிடும், தாக்கப்பட்ட பூ மற்றும் மொக்குகள் உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்தம் முறைகள்: உதிர்ந்த பூ மற்றும் மொக்குகளைப் பொறுக்கி அழித்தல் வேண்டும். ஹெக்டேருக்கு 1 லிட்டர் மாலத்தியான் தெளிக்க வேண்டும்.

இலைப்புழு தாக்குதலின் அறிகுறிகள்: புழுக்கள் இலைப் பச்சை பகுதிகளை சுரண்டித் தின்பதால் இலைகள் சல்லடை போன்று காணப்படும்.கட்டுப்படுத்தும் முறை: மரத்தை சுற்றி உழவுசெய்து மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை வெளிகொணர்ந்து அழிக்கவும்.பூ மொக்குகளைப் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும்விளக்குப்பொறி ஹெக்டேருக்கு ஒன்று அமைக்கவும் கார்பரில் 50 WP மருந்து 1 லி தண்ணீரில் 1 கிராம் கலந்து தெளித்தல் அல்லது மாலத்தியான் 50 EC1 லி தண்ணீரில் 2 மி.லி கலந்து தெளிக்கவும்.

கம்பளிப்புழு தாக்குதலின் அறிகுறிகள்: மரத்தின் தண்டுப் பகுதியில் புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும். புழுக்கள் கூட்டமாக சேர்ந்து மரப்பட்டையை சுரண்டி சாப்பிடும், தழைகளை பல்லால் சுரண்டி சாப்பிடும்.தாக்குதல் முற்றிய நிலையில் மரம் இலைகளே இல்லாமல் மொட்டையாகக் காணப்படும்கட்டுப்படுத்தும் முறைகள்: பூச்சிகளின் முட்டை குவியல்கள் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும். மழை பொழிந்தவுடன் ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து புச்சிகளை கவர்ந்து அழிக்கவும். தீ பந்தம் கொண்டு தண்டுப் பகுதியில் கூட்டமாகக் காணப்படும் புழுக்களை கொன்று அழிக்கவேண்டும்.

மீன் எண்ணெய் ரோசின் சோப் 1 லி தண்ணீரில் 25 கிராம் கலந்து தெளித்தல் அல்லது கார்பரில்1 லி தண்ணீரில் 50 WP 2 கிராம் கலந்து தெளிக்கவும்.இவ்வாறு முருங்கை மரங்களில் பூச்சி தாக்குதலை தடுப்பதற்கு விவசாயிகள் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து குறித்து முன்னோடி விவசாயி ஈசநத்தம் செல்வராஜ் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனை கூறியுள்ளார்.

The post அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை appeared first on Dinakaran.

Related Stories: