தள்ளுபடி செய்த கடனை மீண்டும் கேட்டு மிரட்டல்: அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட கறவை மாடு கடனை கேட்டு அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள ஒகளூர் கிராமத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சிறு, குறு மேம்பாட்டுக்காக 70 பயனாளிகளுக்கு கறவை மாடு வாங்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதிமுக தேர்தல் வாக்குறுதியின் படி இந்த கடனை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டது. கடனை செலுத்திய நிலையில் மானியம் செய்யப்பட்டதாக கூறிய விவசாயிகள் இப்போது அதற்கு வட்டியும் கேட்டு நோட்டீஸ் வந்திருப்பதாக கூறினர்.

கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு அரசு சார்பில் அத்தாட்சியாக கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் கணக்கு தணிக்கையில் வங்கி ஊழியர்கள் செய்த தவறுக்கு தங்களை பலிகடா ஆக்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கடனை திருப்பி கேட்கும் நோட்டீஸ் வரப்பட்ட 47 விவசாயிகள் தள்ளுபடிக்கான அரசின் கடிதத்துடன் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளரை சந்தித்து முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் வீடு திரும்பினர்.

Related Stories: