பெண்களை பின் தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை: வரதட்சணை குற்றங்களுக்கு இனி 10 ஆண்டுகள் சிறை தண்டனை...சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!!!

சென்னை: கடந்த திங்கள் கிழமை தொடங்கிய தமிழக சட்டப்பேரவை இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய முதல், கொரோனா, நீட், பிரதமர் கிசான்  திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர்கள் உரையாற்றினர். தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா மற்றும் ஊரடங்கை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்துக்கும் சட்ட  மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், முக்கியமாக, வரதட்சணைச் கொடுமைக்கான தண்டனை  குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். வரதட்சணை குற்றங்களுக்கு ஏற்கனவே 7 ஆண்டுகள் தண்டனை இருந்த நிலையில் 10 ஆண்டாக  அதிகரிக்கப்படுகிறது. இதனைபோன்று, பாலியல் தொழிலுக்காக சிறார்களை விலைக்கு வாங்கினால் குறைந்தப்பட்சம் 7 ஆண்டு சிறை. பெண்களை பின் தொடர்தல் குற்றத்திற்கு தண்டணை 5 ஆண்டில்  இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிப்பு. 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்லூரி அமைக்க நடப்பாண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் புதிய  பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகத்தான் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை பிரித்தால்தான் நிர்வாக வசதி சிறப்பாக  இருக்கும் என்றார். தொடர்ந்து, பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவது குறித்து பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

Related Stories: