தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர்க்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: கொரோனாவை விதிமுறைகளை கடுமையாக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேறியது. தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருப்போருக்கும் அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது. கொரோனா தொற்று பரவலுக்கு இடையே தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று கூடியது. முதல் நாள் 16 நிமிடங்கள் மட்டுமே கூட்டம்  நடைபெற்றது. மறைந்த எம்எல்ஏக்கள் 23 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய முதல், கொரோனா, நீட், பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றது.

முதல்வர் பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உரையாற்றினர். இதனிஇடயே கொரோனாவை விதிமுறைகளை கடுமையாக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேறியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மசோதா சட்டபேரவையில் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது. கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடுப்பது இனி தண்டனைக்குரிய குற்றம். விதிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள், நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாமல் இருப்பவர்கள், தனி நபர் இடைவெளியை பின்பற்றாவிடில் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: