மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை ரூ.1.51 லட்சம் கோடி: தமிழகத்துக்கு ரூ.11,269 கோடி பாக்கி

புதுடெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1.51 லட்சம் கோடி பாக்கி உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறினார். நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1,51,365 கோடி பாக்கி உள்ளது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.22,485 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.13,763 கோடி, உத்தர பிரதேசத்துக்கு ரூ.11,742 கோடி, குஜராத்துக்கு ரூ.11,563 கோடி, தமிழகத்துக்கு 11,269 கோடி வழங்க வேண்டியுள்ளது. இதுபோல், மேற்கு வங்கத்துக்கு ரூ.7,750 கோடி, கேரளாவுக்கு ரூ.7,077 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.5,424 கோடி வழங்க வேண்டியுள்ளது என்றார். மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் இலக்கு ரூ.6,90,500 கோடி என பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் வரை ரூ.1,81,050 கோடி வசூலாகியுள்ளது. இது பட்ஜெட் மதிப்பீட்டில் 26.2 சதவீதம் என்றார்.

Related Stories: